NCNA கோடை கால உல்லாச விடுமுறை 2016 - Meenal Palani
அன்புடையீர் வணக்கம்,
செப்டம்பர் இரண்டாம் தேதி மாலையில் ஆதவன் சந்தி சாயும் நேரம் UVas Canyon பூங்காவின் நிலப்பரப்பில் 36 நகரத்தார்கள் தன் குடும்பத்தினருடன் குடில் அமைத்த வண்ணம் இருந்தார்கள். பச்சை, மஞ்சள், சிவப்பு, ஊதா நிறப் பட்டாம்பூச்சிகள் போல விரிந்து பறந்து காணப்பட்டன அந்தக்குடில்கள். NCNA-யின் இரண்டு இரவுகள் குடிலில் கூடிக் களிக்கும் கோடைகால உல்லாசமாய் விளங்கியது இந்த அமைப்பு.
மொய்க்கும் வண்டுகளாக சிறுவர் சிறுமியர்கள் ஒரு பக்கமிருக்க, ஆடவரும் பெண்டிரும் கோடை விடுமுறைகளையும், பள்ளியின் ஆண்டுக் கால துவக்கத்தின் குறுங்கதைகளிலும் ஈடுபட்டிருந்தனர். அனைவரின் முகங்களிலும் மலர்ச்சியும், குதூகளிப்பும் காணப்பட்டது. வரும் இரண்டு இரவுகளில், இந்த ஆண்டின் மொத்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் மூட்டைக் கட்டி எடுத்துச் செல்ல முனைப்போடு இருந்தார்கள் என்பது மட்டும் உறுதியாய்த் தெரிந்தது!
2016 ஆம் ஆண்டின் குடில் அமைப்புப் பணிகளை ஒருங்கிணைக்க விஜயலஷ்மி - நாராயணன், லட்சுமி - திரு நாராயணன்,, அங்கம்மை - பழனியப்பன், வித்யா - விஸ்வநாதன் ஆகியோர் முழு மூச்சாய்க் களம் இறங்கினர். ஒவ்வொரு பணியினையும் சிரத்தையாகச் செய்து, அலட்டிக்கொள்ளாமல் இன்புறு முகத்துடன் வரவேற்று, அனைவருக்கும் இந்த அனுபவம் மறக்கமுடியாததாய் இருக்கச் செய்தார்கள். இந்தக் குழுவுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்!
இருட்டில், மின்மினிப் பூச்சிகள் போன்று கையிலும், தலையிலும் ஒளிவிளக்கை ஏற்றி உலா வந்தோம். அவரவர் வீட்டில் சமைத்த உணவுகளை மொத்தமாய்ப் பார்க்கும் வேளையில், எதை எடுப்பது, எதை விடுப்பது என்பதறியாமல் தவித்திருந்தோம்! உப்பும், புளிப்பும், உரைப்பும் கூட்டாஞ்சோறில் தனிச்சுவை பெறுகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
வயிற்றுக்கு ஈயப்பட்டப்பின் என்ன? உற்சாகம் இரட்டிப்பானது தான் உண்மை! இருள் சூழ்ந்த நிலையிலும்,
இளைப்பாறவில்லை உடலும், உள்ளமும். பாட்டுக்குப் பாட்டு சுறுசுறுப்பாய்த் துவங்க, புதிய கலைஞர்கள் அன்றிரவு உருவானார்கள்! முருகப்பனின் "ராஜ ராஜ சோழன் நான்" இளமைப் பருவத்தை நினைவில் சேர்த்தது. தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளையும், நரைத்த மயிரையும் நீக்கி மனம் எங்கோ சென்றது!
தொலைத்தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்ட நாங்கள், தொடர்ந்து அடித்த கூத்தும் பாட்டும் வனத்துறை அலுவலரின் செவிகளை எட்டியது போலும் - உளவு பார்க்க வந்துவிட்டார்! கூட்டுக் குடும்பங்களாய் இருந்த நாங்கள் மனமின்றிப் பிரிந்தோம் சிறுகுழுக்களாய்! அன்று பெய்த பனியில் பூக்களும், புற்களும் மட்டுமின்றி, எங்கள் அனைவரின் மனமொத்தமும் நனைந்தது!
அலைபேசியில் அலாரம் வைத்தே எழுந்து பழகிய மானுடர் நாங்கள் அன்று கருங்குயில் கூவ, மரம்வெட்டி கொத்த, சிட்டுக்குருவிகள் கீச் சத்தம் போட விழித்துக்கொண்டோம். தன்னிடம் உள்ள அனைத்தையும் தந்து, தன்னை மேலும் அழிக்க முற்படும் மனிதனிடம் தான் எவ்வளவு பரிவு கொண்டதாய் உள்ளது இயற்கை? அதன் வளத்தையும், அழகையும், அமைதியையும் காண நடைப்பயிற்சி மேற்கொண்டோம் காலையில்!
சுடச் சுட நரஸூஸ் பில்டர் காபி இல்லையென்ற போதிலும்,போதுமான நெஸ்கேபயும் போல்ஜர்ஸும் நரம்புகளை உசுப்பியது! மூன்று வயது குழந்தைகள் முதல், அண்ணனும், தம்பியும், தோழிகளுடன் பெண்களும், சிறுமியர்களும் - சுமார் எழுபதிற்கும் மேற்ப்பட்டோர் நடைப் பயணத்தில் ஆர்வமாய் இருந்தனர். இரண்டரை மணி நேரம், ராஜேந்திரன் அண்ணனின் தலைமையில், பாதுகாப்பாய்ச் சென்று வந்தோம்! கதிரவன் கீற்று அடர்ந்த வனத்தில் சற்றும் நுழையாமல் அன்று முழுவதும் மென்மையாகவே எங்களை ஆதரித்தான்!
வந்தவர்களுக்கு நீர் மோர் பரிமாறி உபசரித்தார்கள் ஒருங்கிணைப்பாளர்கள். லக்ஷ்மியின் வீட்டு கருவேப்பில்லை இலைகள் அதில் மிதந்து, மணமோடு சேர்ந்தச் சுவையையும் கூட்டின. மதிய உணவு ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெறத் துவங்கியது. சுடச் சுட சுட்ட சோளம், வண்ணமிகுந்த "Bean Salad" மற்றும் கோழி இறைச்சியும் தயாராகின. கல்யாண வீடுகளிலும், படைப்புகாரர்களின் வீட்டிலும் காணப்படும் பரபரப்பு ஆங்காங்கே தென்பட்டது. பெற்றோர்கள் சிலர் எங்களுடன் மதிய உணவில் கலந்து கொண்டது பெருமிதம் அளித்தது. அன்னம் இட்ட கைகளுக்கு உணவு பரிமாறியது ஆதங்கம் கொண்ட மனதிற்கு அமைதியை வழங்கியது.
உணவு சமைத்தாயின; உண்டு களித்தாயின; அடுத்து வந்தது, லதா நாராயணனின் தலைமையில் "வாங்க தெரிஞ்சுக்கலாம்" - அறிமுகச் சமயம். வந்தவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவர்களின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் பரிமாறிக்கொண்டனர். அதில் அனைவரின் சர்ச்சைக்கும் உட்பட்டார் "மாஸ் ஹீரோ சிதம்பரம்". பார்த்த மாத்திரத்திலேயே பலரை ஈர்த்துவிட்டார்! புதிதாய் வந்தவர்களை வரவேற்று வரும் நாட்களில் மீண்டும் பார்த்துப் பழக NCNA வழங்கிய வாய்ப்பாகவே இதனை நம்பிப் பேரின்பம் கொண்டோம்!
மின்சாதனங்களின்றிக் குழந்தைகள், கம்பும், குச்சியும் வைத்து மண்ணை சிரட்டி விளையாடுதலைப் பார்க்க பரவசமாய் இருந்தது. ஓடிப் பிடித்து, கூச்சலிட்டுக் கொண்டு விளையாடியும் களைப்பாறாமல் இருந்தனர். அவர்களுக்கு சிறிய திட்டப்பணிகள் கொடுக்கப்பட்டன. உமா கணேஷ் மற்றும் உமா சோமாவும் இதனை ஒருங்கிணைத்தார்கள். குழந்தைகள் செய்த வண்ணமயமான திட்டப்பணிகள் பெற்றோர்களை மிகைப்பில் ஆழ்த்தின. ஒவ்வொன்றும் ஒன்று போல் இல்லாமல் தனித்திருந்தன. என்ன இருப்பினும் சிறிய கண்கள் தானே பெரிய கனவுகளைக் காண்கிறது!
கணவனும் மனைவியுமாக இணைந்து விளையாடும் விளையாட்டுக்கள் தொடர்ந்து நடைபெற்றன. நித்யா நடத்திய இந்த போட்டியில், வாழ்க்கை விளையாட்டையே நடத்தி செல்லும் எங்களுக்கு எந்த சவாலையும் ஏற்கமுடியும் எனத் துணிந்தனர் போட்டியாளர்கள்! பேச்சும், விளையாட்டும், கேளிக்கைகளிலும் கவனம் செலுத்திய நாங்கள், சூரியன் அஸ்தமிக்கும் தருணம் நெருங்குவதை உணரத்துவங்கினோம். இரவுநேர உணவு சமைக்க ஆயத்தமானோம். ராஜி மற்றும் அங்கம்மையின் கைமணத்தில் கோழிக்குழம்பு தயாரானது. இடியாப்பமும், கோசுமல்லியும் இந்த வருட சூப்பர் ஹிட் ஸ்பெஷல் உணவு என்றே சொல்லவேண்டும்! எஞ்சியிருந்த கதிரொளி அடர்ந்த காட்டில் மறையும் முன்னர் அனைவரும் சூடாகச் சமைத்த உணவை ருசித்துப் பசியாறினோம்.
மெல்ல மெல்ல காரிருள் சூழத் துவங்கியது. அமைதியான சூழலில் மீண்டும் கான ஒலி வீசியது. வடிவுடையம்மன் பாடல் பாடித் துவக்கம் செய்தார் சுப்பு லஷ்மணன். அவரைத் தொடர்ந்து குழந்தைகள் அனுஸ்ரீ, கவின், விஷ்வா, ஷாலினி பாடினர். முருகப்பன் "இது ஒரு பொன்மாலைப் பொழுது" பாடி மனதை மீண்டும் கொள்ளைபோகச் செய்தார். அழகப்பன் அண்ணாமலை "மாமியாரின் பார்வையில் மருமகள்" என்னும் குசும்பான தலைப்பில் கவிதையைச் சொல்லி செட்டியார்களின் ஆதரவையும், ஆச்சிமார்களின் கேள்விக்கும் ஆளானார். சென்னை வெள்ளம் வந்த பொழுது பெருக்கெடுத்தது வெள்ளநீர் மட்டுமின்றி, மனித நேயமும்தான் என்று அழகான வரிகளில் அவர் கவிபாடினார். ராஜேந்திரன் அண்ணன், இனிமையான இல்லற வாழ்விற்கு தேவையான மூன்று ரகசிய யுத்திகளைக் கூட்டத்தில் பகிர்ந்துக்கொண்டார்.
மற்றுமொரு பனிவிழும் இரவில் நீண்ட கதைகளும், நினைவில் நிற்கும் அகலாத செய்திகளும் தொடர்ந்தன. நீல வானம் மட்டும் நின்று கேட்டது, எங்கள் அடங்காத சிரிப்பொலிகளை! காலை புலர்ந்தது; கருங்குயில்கள் உற்சாகத்தை இழந்தன போலும் - நாங்கள் பிரிந்து செல்லும் நாள் என்று அறிந்துகொண்டனவோ?
எஞ்சியிருந்த உணவையெல்லாம் அடுப்பில் ஏற்றி மிஞ்சிப்போகாமல் வக்கணையாய் பரிமாறினார்கள் ஆச்சிமார்கள். சொக்கலிங்கம் அண்ணனின் தலைமையில் 20 நபர்கள் கொண்ட குழு மீண்டும் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். சுமார் 11:30 மணி அளவில் பட்டாம் பூச்சிகளாய் விரிந்திருந்த குடில்கள் ஒடுக்கப்பட்டன; வண்டியில் அடைக்கப்பட்டன. தேனீக்களாய் சுற்றி திரிந்த மழலையர் கூட்டம் பிரியாவிடை தந்து கொண்டிருந்தனர். வந்தவர்கள் அனைவரும், மின்னல் வேகத்தில் சென்ற இரண்டு நாட்களைப்பற்றி ஆதங்கம் கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த இரண்டு இரவுகளைக் களித்து மகிழ NCNA நகரத்தார்கள் ஆர்வமாய் இருப்பர். அடுத்த ஆண்டு மேலும் சுவாரஸ்யமான குடும்பங்களைக் காண்பதிலும், எங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதிலும் முனைப்போடு உள்ளோம்!
-மீனாள் பழநி

An interesting experience narrated by Alagappan Annamalai
Uvas Canyon County Park in Morgan Hill, CA
This lushly wooded park of 1,133 acres, is nestled in upper Uvas Canyon on the eastern side of the Santa Cruz Mountains. This mountain park offers hiking, camping and picnicking opportunities throughout most of the year. Enjoy your visit during the labor camping and experience the many features of Uvas Canyon County Park.
Contact the NCNA 2016 Camping Organizing Team
For directions and more info about the park visit the county park webpage